head


அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்!

|Sat 01st Aug 2020 10:00 AM|Political| Page Views: 1

நாங்கள் வெற்றிப் பெற்று முதல் ஆறுமாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று தொலைபேசியை சுற்றி பெருந்தொகையான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த வெற்றியை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எமது ஆட்சியில் கிராம இராச்சியம், நகரராச்சியம் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தியடையச் செய்வோம். தற்போதைய அரசாங்கம் ஒரு இலட்சம் அரச சேவையாளர்களின் தொழிலை பறிக்கவும், எஞ்சி இருப்பவர்களின் சம்பளத்தை அறவிடவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகவா அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்? ஆட்சியை அமைத்தவுடனே இவர்கள் என்ன செய்தார்கள். ஓய்வூதிய கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு, இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவு அனைத்தையும் இடைநிறுத்தினார்கள்.

பின்னர், வயோதிபர்களின் சேமிப்பு பணத்திலும் கைவைத்தார்கள். தற்போது வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. பொது மக்களிடம் பணம் இல்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதற்கான தீர்வு என்ன? மொட்டு அணியினர் அதனை கூட தெரிவிக்கவில்லை. உலகச் சந்தையில் எரிப் பொருள் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அரசாங்கம் ஒருவருடத்திற்கு எரிபொருளின் விலையை குறைப்பதில்லை என்ற தீர்மானம் எடுத்துள்ளது.

ஆனால், நான் ஆட்சிக்கு வந்தது 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருள் விலையை குறைப்பேன். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கட்டணம் அறவிடமாட்டோம் என்றார்களே! அதனை செய்துள்ளார்களா? மின்கட்டணம் தற்போது வீடுகளுக்கு வந்துள்ளது அல்லவா? அதனை பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா? கடந்த காலத்தில் எவ்வாறு கேட்டார்கள் தற்போது நலமா என்று? ஆனால், அது போன்று நாங்கள் கேட்கமாட்டோம். எமது ஆட்சியில் மார்ச் மற்றும் ஏப்பரல் மாத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தியவர்களின் பணத்தை மீள அவர்களுக்கே திருப்பி கொடுப்போம்.

நாளாந்தம் ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள், தோட்ட தொழிலாளர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்களுக்காக 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்பேன். நாங்கள் மின்கட்டணத்தை திருப்பி கொடுக்கும் போதும், எரிபொருள் விலையை குறைக்கும் போதும், இதனூடாக மக்களிடம் சேமிப்பு அதிகரிக்கும். அதற்கமைய வீழ்சியடைந்துள்ள பொருளாதாரம் மீள எழ ஆரம்பிக்கும்.

கடந்தகால ஆட்சியில் நான் கலாச்சர அமைச்சராக செயற்பட்டபோது, விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களின் வளர்ச்சிக்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தேன். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது, பாதிப்படைந்திருந்த தேவாலயங்களின் நிர்மானத்திற்கு நிதி வழங்கியிருந்தேன். கடற்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மீள் கட்டுமான பணிகளை செய்திருந்தோம்.

தற்போதைய அரசாங்கம் இதன்போது நிதி மோசடி இடம்பெற்றதாக போலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நான் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சரவையில் தேநீர் கூட அருந்தாத மனிதன். இவ்வாறான போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் மோசடிகாரர்களுக்கு மக்கள் தகுந்த பதலினை வழங்குவார்கள் என்று எண்ணுகின்றேன். மதஸ்தலங்களுக்கும் விகாரைகளுக்கும் சேவை செய்ததற்காக என்னை சிறையில் வைத்தாலும் அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.