head


கொரோனா பாதிப்பால் வறுமை குறைப்பில் பின்னடைவு!

|Sat 01st Aug 2020 12:10 PM|General| Page Views: 1

கொரோனா தொற்று காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள், சமூக பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் உள்ளன. இது பல தசாப்தங்களுக்கு வறுமை குறைப்பில் பின்னடைவை ஏற்படுத்துமென ஐ.நா எச்சரித்துள்ளது.

ஐ.நா வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா நெருக்கடி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 218 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாற்று வருமானம், முறையான சமூக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சேமிப்புகள் இல்லாமல், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வறுமைக்கு தள்ளப்படுவார்கள். இது வறுமை குறைப்பை பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி தள்ளும். 2020ம் ஆண்டில் பிராந்திய அளவிலான பொருளாதாரமானது, 0.4 சதவீதமாக சரியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், பணம் அனுப்புவது 13 சதவீதம் அல்லது 10 பில்லியன் டாலர் குறைய வாய்ப்புள்ளது.

நிதி நிலையை நாடுகள் சரி செய்ய வேண்டுமென ஐ.நா வலியுறுத்துக்கிறது. வரி ஏய்ப்பு, பரிமாற்ற விலை மற்றும் எரிபொருள் மானியங்கள் போன்ற பட்ஜெட் சார்ந்த பிரச்னைகளை சரி செய்தால், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கும் தொகுப்புகளை வழங்க முடியும். தற்போதைய கச்சா எண்ணெய் விலை குறைவு, எரிபொருள் மானியங்களை மாற்றுவதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேஷியாவில், 2020 ஆம் ஆண்டில் எரிபொருள் மானியங்கள் அதன் முழு கொரோனா சமூக உதவி மற்றும் தூண்டுதல் நடவடிக்கை செலவை விட அதிகமாக இருக்கும். சமூக நலத்திட்டங்களை ஊக்குவிப்பதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சுகாதாரத்திற்கு அதிகமாக செலவிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் தலைவர் ஆர்மிடா சல்சியா அலிஸ்ஜபானா கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, புருனே, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் ஆறு நாடுகளில், மிகப்பெரிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸில் சுகாதாரத்திற்கு செலவிடுவது, ஐ.நா.,வின் மனித மேம்பாட்டு குறியீட்டில் குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் மூன்று நாடுகள், இரண்டாவது மிக குறைந்த பிரிவிலும், மீதமுள்ள இரண்டு நாடுகள் நடுத்தர குறியீட்டை பெற்றுள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.