head


பேரழிவை நோக்கி நகரும் ஆப்கானிஸ்தான்!

|Sat 01st Aug 2020 12:30 PM|Political| Page Views: 1

'ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரசால், வறுமை விகிதம் 55லிருந்து 80 சதவீதமாக அதிகரித்துள்ளது' என, அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஆப்கான் மறுகட்டுமான சிறப்பு கண்காணிப்பு அலுவலகம்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று ஆப்கானிஸ்தானில் பெரும் பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேலையின்மை; எல்லை மூடலால் உணவுப்பொருள் விநியோகத்தில் இடையூறு; விலைவாசிகளின் கடும் உயர்வடைந்துள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் உணவுப்பாதுகாப்பில் கையை வைத்துள்ளன.

ஆப்கனில் தற்போது, 3.22 கோடி பேர் உணவு நெருக்கடியில் உள்ளனர்; அல்லது உணவுப்பாதுகாப்பு அவசர நிலையில் உள்ளனர். கொரோனாவால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தபடியே செல்கிறது. மக்களின் வாங்கும் திறன் குறைகிறது. தற்போது வறுமையில் உள்ள 3.22 கோடி பேருடன் மேலும் 80 லட்சம் பேர் வறுமையில் வீழ்ந்துள்ளனர். இதன் மூலம் வறுமை விகிதம் 55 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மானுடப் பேரழிவை நோக்கி ஆப்கான் செல்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரசால் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பொருளாதாரம், போர்ச்சூழலால், கடும் உணவுப்பாதுகாப்பின்மை உருவாகியுள்ளது. இதனால், அடிப்படை ஆரோக்கிய அமைப்புகள் கிடைக்காமல் மேலும் ஒரு கோடி பேர் வறுமையில் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

ஆப்கானிஸ்தானில் 36,500 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது; 1300 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாகக் காட்டப்படுகிறது. ஏனெனில் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 90 சதவீதம் மக்கள் இன்னும் பரிசோதிக்கப்படாமல் உள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் மாபெரும் மானுடப் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தப் பேரழிவிலிருந்து ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றப் போவது யார்' என, வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.