head


புதிய வரைபடத்தை ஐ.நா.விற்கு அனுப்பியது நேபாளம்!

|Sun 02nd Aug 2020 09:25 AM|General| Page Views: 2

புதிதாக வெளியிட்ட வரைபடத்தை ஐ.நா.விற்கும், கூகுள் தேடுதல் வலைதளத்திற்கும் அனுப்பி வைத்தது நேபாளம். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் நேபாள பார்லி.,யின் கீழவையில் கடந்த ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த புதிய வரைபட மசோதா, நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து நோபாளம் நாட்டின் மாகாணங்கள் தலைநகர் என மாற்றி அமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஆங்கில மொழியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் தயார் செய்துள்ளது.

தூதரக உறவுகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டி ஐ.நா. தலைமையகத்திற்கும், முன்னணி தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.