head


பெர்லினில் மக்கள் போராட்டம்!

|Sun 02nd Aug 2020 09:30 AM|General| Page Views: 2

கரோன வைரஸ் காரணமாக ஜெர்மனியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ ஜெர்மனியில் கரோனா பரவலையை தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெர்னிலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நாங்கள் சுதந்திரமான மக்கள் என்று எழுதப்பட்ட பதாகைகளை தாங்கிய மக்கள், ”நாங்கள் குரல் எழும்புகிறோம்... ஏனெனில் நீங்கள் சுதந்தரத்தை பறிக்கிறீர்கள்” என்று முழக்கமிட்டனர்.மேலும் ஜனநாயகம் திரும்ப வேறும் கோரிக்கை வைத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட எவரும் மாஸ்க் அணியவில்லை.

ஜெர்மனி, மே மாதம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும், கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியது. இந்த நிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடங்களில் ஊரடங்கையும் ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.