head


ஜன.,20ல் இறுதி வாக்காளர் பட்டியல்:

|Friday, 11 September 2020|| Page Views: 1

தமிழகத்தில் ஜன.,20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜன.,20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹ_ தெரிவித்துள்ளார். முன்னதாக ஜன.,15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நவ.,16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினத்திலிருந்து டிச.,15ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. றறற.nஎளி.in என்ற வெப்சைட் மற்றும் எழவநச hநடி டiநெ என்ற மொபைல் 'ஆப்'பிலும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.