head


இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா!

|Saturday, 12th September 2020|| Page Views: 1

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்கள், தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சில நாட்களுக்கு முன் மாயமாயினர். இவர்களை, சீன ராணுவத்தினர் பிடித்து சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, நம் ராணுவத்தினர் அனுப்பிய 'ஹாட்லைன்' செய்திக்கு, சீன ராணுவம் பதில் அனுப்பியது.

மாயமான 5 வாலிபர்களும், தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீன ராணுவம் கூறியுள்ளது. 'அவர்களை, நம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது' என, மத்திய அமைச்சர், கிரின் ரிஜிஜு கூறியிருந்தார். இந்நிலையில், 5 இளைஞர்களையும் இந்தியாவிடம் இன்று சீன ராணுவம் ஒப்படைக்கிறது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.