head


வடகொரியாவுக்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள உத்தரவு

|Sunday, 13 September 2020|| Page Views: 1

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரொனா பரவி வரும் வேளையில் வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரம் வெளியாவது இல்லை. இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைதளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி மாதம் முதல் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையை வடகொரியா அமல்படுத்தியது எனவும், அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.