head


அமெரிக்கா - மாலத்தீவு இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

|Sunday, 13 September 2020|| Page Views: 1

இந்திய பெருங்கடல் பகுதியில், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அமெரிக்கா - மாலத்தீவு இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்டை நாடான சீனா, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல்பகுதியில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவுக்குக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகன்', வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா - மாலத்தீவு இடையே, கடந்த, 10ம் தேதி, ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான, துணை அமைச்சர் ரீட் வெர்னரும், மாலத்தீவு ராணுவ அமைச்சர் மரியா திதியும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.