head


இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கனில் இடமளிக்கக்கூடாது

|Sunday, 13 September 2020|| Page Views: 1

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கன் மண்ணில் இடம் தரக்கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கனில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக தோகாவில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கன் மண்ணில் இடம்தரக்கூடாது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அமைதி ஏற்பட, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இந்தியா ஆதரவு அளிக்கும். ஆப்கன் தலைமையில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். ஆப்கனின் வளர்ச்சி கூட்டணியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆப்கன்னுக்கு லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை இந்தியா வழங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கன் நாட்டினர் இந்தியாவுக்கு வர வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது ஆப்கனின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு, எங்களது உறுதித்தன்மைக்கு சில எடுத்துக்காட்டுகள். ஆப்கனில் 400க்கும் கூடுதலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆப்கனுடனான இந்தியாவின் உறவு வலிமையுடனும், அசைக்க முடியாத வகையிலும் உள்ளது. எப்போதும் நாங்கள் சிறந்த நட்பு நாடுகளாக இருந்துள்ளோம். எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.