head


சீனாவின் முயற்சி படுதோல்வி

|Monday, 14 September 2020|| Page Views: 1

சீனாவின் 'ஆப்டிகல் ரிமோட் சென்சிங்' செயற்கைக்கோள் தனது சுற்றுவட்டப் பாதையை சரியாக அடையாமல் விண்ணில் தவறிச் சென்றதால், சீனாவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. சீனாவின் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, நேற்று (செப்., 12) மதியம் 12:00 மணிக்கு சிலிங்-1 செயற்கைக்கோள் குவைசு1ஏ ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.சரியான திட்டமிடல் இல்லாததால் இந்த செயற்கைக்கோள் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையை அடையவில்லை. சீனாவின் இந்தப் படுதோல்வி குறித்து, சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். தோல்விக்கான காரணம் மற்றும் இதற்கு ஏற்பட்ட பொருட்செலவு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.