head


கொரோனா ஊரடங்கை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

|Monday, 14 September 2020|| Page Views: 1

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கடந்த 6 வாரங்களாக கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பழங்களை வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய 176 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கை தளர்த்துவதற்கு போராடுவதால் பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுவரை ஆஸியில் 26,651 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 810 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தினசரி பாதிப்பு 700 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆஸியில் 44 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.