head


கொரோனாவின் மாற்றங்களை கண்டறியும் 'இணைய கணிப்பான்:'

|Monday, 14 September 2020|| Page Views: 1

கொரோனா வைரஸ் தொற்றை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்காக, வைரசின் மரபணு மாற்றங்களைக் கண்டறிய, 'சார்ஸ் கொவி2'வின் மரபியல் வரிசைகளை, இந்திய விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் சவாலின் வேரை கண்டடைய, அதை பல கூறுகளாகப் பிரித்து, பல்வேறு திசைகளிலிருந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதில், கோல்கட்டாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணைப் பேராசிரியர் டாக்டர் இந்திரஜித் சாஹாவும், அவரது குழுவினரும் இயந்திர கற்றலின் அடிப்படையில் வைரசின் வரிசைகளைக் கணிக்கும் இணையம் சார்ந்த கொரோனா கணிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்திய சார்ஸ் கொவி2வின் மரபியலையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இந்த ஆய்வுக்கு நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.