head


மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் இஸ்ரேல்

|Tuesday, 15 September 2020|| Page Views: 1

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலில் நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு கூறுகையில், “இஸ்ரேலில் இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நம்முடைய இலக்கு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதுதான். அதன் பரவலைத் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.