head


ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு

|Tuesday, 15 September 2020|| Page Views: 1

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மூவரும் போட்டியிட்டனர். அந்நாட்டு பார்லி.,யின் மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டளித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹிடே சுகா பெரும் வெற்றி பெற்றார். சிகரு இஷிபா 68 ஓட்டுகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 ஓட்டுகளும் பெற்றனர். 71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார். மேலும் இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால் யோஷிஹிடே சுகா அடுத்தாண்டு செப்.,மாதம் வரை பதவி வகிப்பார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.