head


சடலத்தை இனங்காண பொதுமக்களிடம் உதவி!

|Wednesday, 16th September 2020|General| Page Views: 1

வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்காண பொதுமக்கள் உதவியை, பறயனாலங்குளம் பொலிசார் கோரியுள்ளனர்.

ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று, பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை.

இவரது சடலத்தை இன்று வரையிலும் அடையாளம் காணமுடியவில்லை. இறந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார்.

இந்த நபரை இனங்காண்பதற்கு, பொதுமக்கள் 024-3242448 ஃ 071-8592115 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பறயனாளங்குளம் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.