head


விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

|Wednesday, 16th September 2020|Political| Page Views: 1

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.