head


பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை!

|Wednesday, 16th September 2020|Political| Page Views: 1

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத் திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிப்பதால் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார சவால்களும் இதேபோன்று வெற்றி கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சேவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி இரா ஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெளிவான முறையான செயற்றிட்டத்தின் கீழ், நாட்டின் பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் மக்களுக்கு மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வங்கித் துறை வலுப்படுத்தப்படுவதோடு, தொழில் முயற்சியாளர் களையும் பாதுகாப்பது அவசியமாகும் என்றும் நிதி இர ஜாங்க அமைச்சர் தெரிவித்தார். பெற்றோர் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டுகோள்! மட்டக்களப்பில் மாணவர்களிடம் போதை பொருள் பரிமாற்றம் அதிகரிப்பு பெற்றோர் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறு சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். சுதர்சன் வேண்டுகோள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் போதைப்பொருள் மாணவர்களிடம் பரிமாறப்புடுகின்றது எனவே பெற்றோர் பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். சுதர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட செயலகத்தினால் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு மாவட்ட செயலணிக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை 15 மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக ஜஸ் போதைப் பொருள் மற்றும் ஹரோயின் போதைப் பொருள் மாணவர்களிடத்தில் பரிமாறப்படுகின்றதுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கு சென்று வெளியில் வரும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் பரிமாற்றப்படுகின்றது என தகவல்கள் கிடைத்துள்ளது பாதாள கோஷ்டி மற்றும் போதை பொருள் கடத்தும் நபர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது இதன் அடிப்படையில் முற்றாக போதை பொருளை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுவருகின்றனா.

இருந்தபோதும் பெற்றோர்கள் உங்களது பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள் மாவணர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.