head


ரத்தத்தில் ஒக்சிஜன் அளவை கண்காணிக்கும் புதிய கடிகாரம்!

|Wednesday, 16th September 2020|General| Page Views: 1

நேற்று ஐபாட் ஏர்-ஐ மற்றும் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

இதைபோல் இந்தாண்டிலும் ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலைகளை அறிமுகம் செய்துள்ளது. நேற்று வெளியாகியுள்ள புதிய தயாரிப்புகளில் முக்கியமாக புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப் புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளை கணக்கிட்டு கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.