head


உய்குர் பழங்குடிகளுக்கு 60 ஏக்கரில் குடியிருப்புகள்!

|Friday, 25th September 2020|Political| Page Views: 34

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறுபான்மையினரை கட்டாய கருத்தடை செய்ய சீன அரசு வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் என்ற பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது என, அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தது.

'உய்குர் இனப் பெண்கள் 20 லட்சம் பேர் சீன கேம்ப்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அவர்களுக்கு சீன அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்' எனக் குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஓர் ஆஸ்திரேலியா அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: பழங்குடி மக்களான உய்குர் இன சீன மக்கள் சுதந்திரமான இடவசதி கொண்ட சிறந்த குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரத்யேகமாக 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதனைச் சுற்றி சீன அரசு 45 அடி கம்பவுண்ட் சுவர் எழுப்பி, 13 ஐந்து மாடி கட்டிடங்களை கட்டி, அதில் பழங்குடியினரை தங்க வைத்துள்ளனர். இதற்கு கஷ்கார் புராஜெக்ட் என்று பெயர் இடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் பத்தாயிரம் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜின்ஜியாங் மாகாணத்தில் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒரு செய்தி அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் வருகை தந்தனர். இவர்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். 'சிறைச்சாலைகள் போல அல்லாமல் பழங்குடியின மக்கள் நாகரீக உலகில் சுதந்திரமாக வாழ ஏற்ற புகலிடமாக இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது' என, சீன அரசு தெரிவித்துள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.