head


ரூ.100 நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்!

|Tuesday, 13th October 2020|| Page Views: 1

மறைந்த பா.ஜ.க, தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12-ல் பிறந்த அவர், 2001, ஜன.,25-ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் நேற்று வெளியிடப்பட்டது.

வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.