head


ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

|Wednesday, 14th October 2020|| Page Views: 1

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், குறித்து விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்க, மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியை அறிமுகம் செய்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நாம் வசிக்கும் இடம் அருகே கொரோனா வைரஸ், தொற்றுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டும். தொற்று பாதித்தவர்களை சந்திப்பதை தவிர்க்க முடியும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றில், இருந்து தற்காத்து கொள்வது குறித்து தகவல்களை வழங்கும். இந்த செயலி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரஸ் அத்னோம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சோதனையை இலக்கை எட்டவும், ஹாட்ஸ்பாட்டாக எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும் பொது சுகாதார துறைகளுக்கு இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.