head


லடாக் செல்கிறது பார்லி. குழு; வீரர்களுக்கான வசதி குறித்து ஆய்வு!

|Thursday, 15th October 2020|| Page Views: 1

சீனாவுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், பார்லிமென்டின் பொது கணக்கு குழுவைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், லடாக் எல்லைக்குச் சென்று, வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்தாண்டு துவக்கத்தில், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் ஒரு அறிக்கை, பார்லி.யில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், லடாக், சியாச்சின் போன்ற கடும் பனிப்பொழிவு உள்ள பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு, உரிய உடைகள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படவில்லை என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான, பார்லிமென்டின் பொது கணக்கு குழு ஆய்வு செய்தது. முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத்துடனும் இந்தக் குழு ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, லடாக்குக்கு சென்று நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருந்தார்.

வரும், 28, 29-ல் இந்த நிலைக் குழுவைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் லடாக் சென்று, வீரர்களுடன் பேச உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் கடும் பனியை தாங்கக் கூடிய ஆடைகள் மற்றும் சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆய்வு செய்ய உள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.