head


நாளை முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம்!

|Thursday, 15th October 2020|| Page Views: 1

நாளை; முதல் ஆம்னி பஸ்கள் சேவை துவக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்ப்பட்டது. கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஆம்னி பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பபட்ட போதிலும் ஆம்னிபஸ்களை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் நளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்களின் சேவை துவக்கப்படும்., பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.