head


பாங்கொக் நகரில் அவசரகால நிலை!

|Friday, 16th October 2020|General| Page Views: 1

தாய்லாந்தில் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பாங்கொக்கில் ஒன்றுகூடி கூட்டங்களை நடாத்துவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் சுமார் 20 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் தாய்லாந்தில் மன்னர் ஆட்சி மாற வேண்டும் எனவும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.