head


நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம்!

|Friday, 16th October 2020|| Page Views: 1

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, கலாமின் வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார். மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என கூறி உள்ளார். மேலும் டாக்டர் அப்துல் கலாம் தொடர்பான வீடியோ தொகுப்பையும் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.