head


ரியாஜின் மனுவை நிராகரிக்குமாறு மனு தாக்கல்!

|Saturday, 17th October 2020|General| Page Views: 1

தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரன் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அடிகளார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள லோரன்ஸ் ரமநாயக்க அடிகளார், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன் என்ற சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தாக கூறினார். இப்படியிருக்கையில் அவரை விடுவிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தாம் மீண்டும் கைது செய்யப்படுவதை எதிர்த்து ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.