head


பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்!

|Saturday, 17th October 2020|Crime| Page Views: 1

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு பாரிஸின் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

18 வயதான மாணவர் ஒருவர் பாடசாலையின் வரலாற்று ஆசிரியரை கழுத்தை துண்டாக்கி கொன்றதையடுத்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆசிரியர் தமது பாடசாலை மாணாக்கர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்து, பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளானவர் என கூறப்படுகிறது. பொலிசாரால் கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி, 18 வயதேயான மாஸ்கோவில் பிறந்த செச்செனிய இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்ட போது உயிரிழக்கும் தருவாயில் அல்லா{ஹ அக்பர் என சத்தமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.