head


ஜேர்மனி பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!

|Saturday, 17th October 2020|General| Page Views: 1

ஐரோப்பாவில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், உள்ளூர் தலைவர்கள் தனது புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மனி பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் எச்சரித்துள்ளார். போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா, குரோவேஷியா, செக் குடியரசு, ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்திலுமே நேற்று (வியாழக்கிழமை) புதிதாக கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவானது.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, உள்ளூர் தலைவர்கள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இரவு 11 மணி ஊரடங்கு, ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை மற்றும் வெளியிடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிய புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முதலில் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். ஆனால், பின்னர் ஏஞ்சலாவின் புதிய கட்டுப்பாடுகள் அடக்கிய திட்ட வரைவில் அவர்கள் கையெழுத்திட மறுக்கவே, ஏஞ்சலா கடுங்கோபம் அடைந்தார். நாம் என்னென்ன கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டோமோ அவையே ஒரு பேரழிவை தடுக்க போதுமானவை அல்ல என்றார் அவர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.