head


பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதே பாக்.,கின் கொள்கையாக உள்ளது!

|Saturday, 17th October 2020|| Page Views: 1

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையே பாகிஸ்தான் கொள்கையாக வைத்துள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் ஆசிய சமூகம் சார்பாக நடந்த ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் மேலும் தெரிவித்ததாவது, ‛ பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் அண்டை நாடாக இருந்தாலும் பரஸ்பர உறவுமுறையை கடைப்பிடிப்பது கஷ்டமாக உள்ளது. இதனால் அந்நாட்டுடன் சாதாரண விசா முறையை கடைப்பிடிக்க முடியவில்லை. இயல்பான வர்த்தக உறவும் அந்நாட்டுடன் இந்தியாவுக்கு இல்லை. ஆப்கான் தொடர்புக்கும் பாகிஸ்தான் பெரும் தடையாக உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக்குடனான உறவு மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் ஆதரவு திரட்ட முயற்சித்து பாக்., தோல்வியையே சந்தித்து வருகிறது' இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.