head


பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!

|Tuesday, 27th October 2020|Political| Page Views: 20

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் மக்ரோங்கின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்ரோங்கின் கருத்து மூலம் அவர், இஸ்லாத்தை தாக்கியுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் பிரான்சில் நிலவி வரும் சூழ்நிலையை குறிப்பிட்டு இம்ரான் கான் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க்கு எழுதிய அந்த கடிதத்தில் இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்பை தூண்டும் உள்ளடக்கங்களை ஃபேஸ்புக் தடைசெய்ய வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இஸ்லாமியத்துக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் வன்முறையை உலகம் முழுவதும் தூண்டி வருவதாகவும், குறிப்பாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இதுபோன்ற செயல்கள் நடப்பதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை (ஹோலோகாஸ்ட்) மறுக்கும் உள்ளடக்கங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை போல, இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் உள்ளடக்கங்களுக்கும் ஃபேஸ்புக்கில் தடைவிதிக்க வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். தனது கடிதத்தில், பிரான்சில் நிலவி வரும் சூழ்நிலையையும் குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், அங்கு இஸ்லாம் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறுக்கும் அல்லது திரிக்கும் வகையிலான உள்ளடக்கங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் தங்களது சமூக ஊடகத்தின் கொள்கையை மாற்றியமைப்பதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஃபேஸ்புக் அறிவித்தது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய ஃபேஸ்புக்கை சேர்ந்த அதிகாரியொருவர், ஃபேஸ்புக் அனைத்து வகையான வெறுப்புகளுக்கும் எதிரானது என்றும், இனம், நாடு அல்லது மதத்தின் அடிப்படையில் தாங்கள் தாக்குதல்களை அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களை எங்களது பார்வைக்கு வந்தவுடன் நீக்கிவிடுவோம். எனினும், இதுதொடர்பாக நாங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.