head


வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பிய குஜராத் நீதிமன்றம்!

|Tuesday, 27th October 2020|| Page Views: 22

கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன. அதேபோன்று தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கொ ரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலும் காணொலி காட்சி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.