head


பிரதமர் மோடி 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பு!

|Tuesday, 17th November 2020|| Page Views: 1

'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் மாநாட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் பிரிக்ஸ் எனப்படும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின், 12வது மாநாடு, இன்று, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக நடைபெறவுள்ளது. ரஷ்யா தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் போல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புடின், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர் இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்ய அதிபர் புடின் விடுத்த அழைப்பின்படி, 'உலக ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி' என்ற தலைப்பில் நடக்க இருக்கும், 12வது பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து, தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்வர். கொரோனா வைரசை ஏதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், சுகாதாரம், ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.