head


மே.வங்கத்தில்; தோறும் சுற்றுப்பயணம்!

|Thursday, 19th November 2020|| Page Views: 1

மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றுவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மாதம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். மே.வங்க மாநிலத்தில் வரும் 2021 ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலின் மூலம் மொத்தம் 200 இடங்களுக்கும் மேலாக வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மாதம் தோறும் மே.வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் போது மே.வங்க பா.ஜ.,வினருக்கு தேர்தல் வியூகம் வகுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவுடன் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மே.வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபைதொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 148 இடங்கள் மெஜாரிட்டியாக காண்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் வரும் 2021 ம் ஆண்டில் பா.ஜ., 200 இடங்களை வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற பார்லி.,பொது தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 எம்.பி., தொகுதிகளில் 18 இடங்கள் வரையில் பா.ஜ.,வென்றது.

34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த இடது சாரி ஆட்சியை கடந்த 2011 ம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது தொடர்ந்து 10 ஆண்டுகளாக திரிணமுல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2016 ல் நடந்ததேர்தலில் 211 இடங்களை வென்று திரிணமுல் ஆட்சி அமைத்துள்ளது. இத்தேர்தலில் பா.ஜ., 3 இடங்களை பிடித்தது. அதே நேரத்தில் பார்லி.,யில் கிடைத்த வெற்றியை அடிப்படையாக கொண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட பா.ஜ., களம் இறங்க உள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.