head


பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

|Thursday, 19th November 2020|| Page Views: 1

அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கொரோனா சவால்கள் குறித்தும், பருவநிலை மாற்றம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். விரைவில் அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரில் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜோ பைடனுடன் உரையாடியதாகவும், அதிபராக தேர்வானதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், இந்திய - அமெரிக்க உறவை மேலும் வலுவாக்க இருவரும் உறுதி பூண்டதாகவும், கொரோனா சவால்கள், பருவநிலை மாற்றம், இந்திய - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசித்தோம் எனவும் பதிவிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கமலாவின் வெற்றி, இந்திய அமெரிக்கச் சமூகத்தினருக்கு பெருமிதம் தரும் நிகழ்வு என பாராட்டி உள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.