head


ஆப்கன் அதிபர்- இம்ரான் கான் சந்திப்பு!

|Friday, 20th November 2020|Political| Page Views: 1

பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக ஆப்கானிஸ்தான் வந்துள்ள இம்ரான் கான்,அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்து பேசினார்.

பாகிஸ்தான் பிரதமராக, 2018ல், இம்ரான் கான் பொறுப்பேற்றார். அதன் பின், முதன் முறையாக, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு நேற்று சென்றார். அவரை, ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனீப் அத்மர், விமான நிலையத்தில் வரவேற்றார்.

இம்ரான் கானுடன், பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, வர்த்தகத் துறை ஆலோசகர் அப்துல் ரஸாக் தாவூத், ஐ.எஸ்.ஐ., தலைவர் ஜெனரல் பைஸ் ஹமித் உள்ளிட்டோர் வந்தனர்.தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியை, இம்ரான் கான் சந்தித்து பேசினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.