head


முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு -நிவேதா உதயராயன்

|Saturday, 21st November 2020|General| Page Views: 1

பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின.

பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் நிலைக்குப் பெண் வந்த பின்னரும், விண்வெளிதாண்டித் தம் அறிவைக் கடந்தபின்னும் கூட பெண்களுக்கான அடக்குமுறைகளும் குடும்பத்தில் பெண்ணை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் ஆண்களின் மனநிலையும் இன்றுவரை தொடர்கிறது.

அதற்கான காரணம் ஆண்களாலேயே கட்டமைக்கப்பட்ட எம் சமூக பண்பாட்டு விழுமியங்கள் தான் என்றாலும் மேற்குலகிலும் கூட இன்னும் பல பெண்கள் முற்றுமுழுதாக சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

அடக்குமுறைகளின் அளவீட்டில் மாற்றங்கள் இருந்தாலும் கூட அவற்றை மீறுவதிலும் அவற்றுக்கு எதிரான செயல்களைச் செய்வதிலும் மனித மனம் பாரிய ஆசை கொள்கின்றது. அப்படியான ஒரு வெளியீடு தான் இன்றைய காலகட்டத்தில் பல தமிழ்ப் பெண்களின் ஒழுக்க மீறல்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டு எம் சமூகத்தை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றபடி இருக்கிறது.

அதற்கான முக்கிய காரணங்கள் கணவனின் அதீத உழைப்பு, மனைவி பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமை, பெண்களின் சுய சம்பாத்தியம் என்பவற்றைவிட அதி வேகமாக வளர்ச்சிகண்ட தொழில்நுட்பமும் இலத்திரனியல் சாதனங்களும் இதற்குத் துணை போகின்றது. எந்த இடத்திலும் எந்நேரத்திலும் கணனி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்த முடிந்துள்ளமை மனித இனத்துக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்புத்தான் எனினும் பலரின் வாழ்வை இந்தத் தொலைபேசியே சீரழித்துக்கொண்டும் இருக்கிறது.

முகநூல் ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் முகநூலூடாக பல புதிய நல்ல நட்புக்களையும் பல தெரியாத விடயங்களையும் நாம் அறிந்து கொள்வது மிக எளிதாகிவிட்டாலும் கூட சமூகத்துக்கு ஏற்புடையதற்ற சமூகச் சீர்கேடுகள் நிறைந்த இடமாகவும் முகநூல் காணப்படுவது மனவருதம் தரும் விடயம்.

சமீப காலமாக அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு கருவியாக முகநூல் என்னும் இராட்சதன் தன் கோரக் கைகளை விரித்தபடி உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டு இருக்கிறான். முகநூல் என்னும் மாயக் கண்ணாடி தன் சதிவலைக்குள் சிறுகச் சிறுக அனைவரையும் சிக்கவைத்துக்கொண்டு இருக்கின்றது. இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒருபாலமாக முகநூல் தொழிற்பட்டாலும், அத்தனைக்கத்தனை பெண்கள், ஆண்கள் எனச் சிறியோர் முதல் முதியோர் வரை மோசமான, ஒழுக்கக்கேடான விடயங்களைச் செய்வதற்கும் இந்த முகநூல் எல்லையற்ற பாதையைத் திறந்துவிட்டுள்ளது எனலாம்.

என்னதான் பெண்கள் கல்வியறிவைக் கொண்டிருந்தாலும் கூட பல பெண்கள் விழிப்புடன் இருப்பதுமில்லைச் செயற்படுவதுமில்லை. அதுவும் தற்காலத்தில் புதிய இலத்திரனியல் சாதனங்களான ஸ்கைப்பில் ஆரம்பித்து ட்விட்டர், வைபர், வற்சப், மெசெஞ்சர் என இலவசமாக எத்தனை மணி நேரமும் உரையாடக்கூடியதாகவும் நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடும் வசதியையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வு தடம்புரண்டு அவர்கள் குடும்பம் சிதையும் நிலைக்கே இட்டுச்செல்கின்றது. புலம் பெயர்ந்து வாழும் எம் பெண்களில் பலர் இந்த மாய வலைக்குள் சிக்கி தம் சுயம் தொலைத்து தம்மையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் இங்கு பிறந்து வளர்ந்த இளைய புலம்பெயர்ந்த தலைமுறையினர் முகநூல் கணக்குகள் வைத்திருப்பினும் எம்மைப்போல் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் எங்களைப் போல் அறிவு குறைந்தவர்களாக இருக்காது துணிவும் சிந்தனைத் திறனும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதனால் அவர்கள் பாதுகாப்பை தாமே உறுதிசெய்யக்கூடிய நிலையில் இருக்கின்றனர். மிகச் சொற்பமானவர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர். புலம்பெயர்ந்து வந்த தமிழ் சமூகத்தின் குணங்களில் பல அவர்களிடம் இல்லை. ஆனாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நல்லவர்கள் என்றும் கூற முடியாது. பெற்றோர்களின் குணங்களோடும் சிலர் இருக்கின்றனர்தான்.

முன்னர் முகநூலில் செய்திகள் எழுதும் பகுதி மட்டுமே இருந்தது. அது கணனியையோ அல்லது மடிக்கணனியையோ இயக்கினாலே எழுத முடிந்தது. பெருப்பாலானோர் வீட்டின் பொது இடத்தில் கணனியை வைத்திருந்தனால் மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது தொலைபேசியின் பயன்பாடு பெருகியபின் எந்த இடத்திலும் எந்நேரமும் தொலைபேசியை இயக்க முடிந்த நிலை தோன்றிவிட்டது. சமூக பயம் அற்றுப்போய் பலரிடம் துணிவுடன் கள்ளத்தனம் குடிகொண்டு எதையும் செய்யலாம் என்னும் நிலை தோன்றிவிட்டது. அதற்கான முக்கிய ஊக்கியாக messenger எனப்படும் தொடர்பூடகம் செயற்படுகிறது. இதில் ஒருவருடனோ அன்றிக் குழுவாகவோ எழுதலாம்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.