head


மாவீரர் தின சுவரொட்டிகள் பிரெஞ்சுப் பொலிசாரால் அகற்றப்பட்டது!

|Saturday, 21st November 2020|General| Page Views: 1

குட்டியாழ்ப்பாணம் என அழைக்கப்படும் பாரிஸ் லாசப்பல் பகுதியில் மாவீரர் நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பிரெஞ்சுப் பொலிசாரால் அகற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறி;த்த பகுதியில் தமிழ் வர்த்தக நிலையங்களில் நேற்று முன் தினமிரவு ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுப் பொலிசார் பார்த்துள்ளனர். அவர்கள் வர்த்தகர்களை அணுகி அந்த சுவரொட்டிகள் தொடர்பாக கேள்வி எழுப்பி அவற்றை அகற்றுமாறு பணித்துள்ளனர். ஆனால் வர்த்தகர்கள் இச்சுவரொட்டிகளை யார் ஒட்டினார்கள் என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும் அவற்றை அகற்றவும் மறுத்துள்ளனர். இதனையடுத்து பொலிசாரே சுவரொட்டிகளை அகற்றியதாக தெரியவருகின்றது.

இதேவேளை சுவரொட்டியை ஒட்டிய ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.