head


பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது!

|Saturday, 21st November 2020|| Page Views: 1

எல்லை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன் தினம் (நவ.,19) அதிகாலையில் நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த பயங்கரவாதிகளை போலீசார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் ராணுவ தளபதி நராவனே கூறியதாவது: பாதுகாப்புப் படையினர் திறம்பட பயங்கரவாதிகளை அழித்துள்ளனர். வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.