head


செயற்கைக்கோள் மற்றும் இணைய சேவைகளில் பூடானுக்கு உதவி!

|Sunday, 22nd November 2020|| Page Views: 15

பூடான் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாயிலாக விண்ணில் செலுத்துவது, சர்வதேச அளவில் மூன்றாவது இணைய நுழைவாயிலை பி.எஸ்.என்.எல்-உடன் இணைந்து அமைப்பது ஆகியனவற்றில் இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பூடானுக்கான ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இணைந்து தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவிற்குப் பின் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் பூடானுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும். அண்டை நாடான பூடானின் தேவைகளைப் பூர்த்தி செய்வது இந்தியாவின் பிரதானப் பணியாக இருக்கும்.

பூடான் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாயிலாக விண்ணில் செலுத்துவது, சர்வதேச அளவில் மூன்றாவது இணைய நுழைவாயிலை பி.எஸ்.என்.எல்-உடன் இணைந்து அமைப்பது ஆகியனவற்றில் இந்தியா உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பூட்டான் பிரதமர் ஷெரிங், ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியதில் மகிழ்ச்சி. தாங்கள் (மோடி) முதல் திட்டத்தின் துவக்கத்தின் போது பூட்டான் வந்திருந்தீர்கள். இப்போது இரண்டாம் கட்டமும் தொடங்கப்பட்டுள்ளதால் இருநாட்டு மக்களும் பயனடைவர். கொரோனா பெருந்தொற்று எதிர்கொள்வதில் இந்தியா திறம்பட செயல்படுவதற்கு எனது பாராட்டை உரித்தாக்குகிரேன். கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா காட்டும் முயற்சி வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம். கொரோனா தடுப்பூசி மருத்துவப் பயன்பாட்டுக்காக சந்தைக்கு வரும் போது அதை பூடானுக்கும் அளிப்பதாக தாங்கள் உறுதியளித்துள்ளமைக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூபே அட்டைகள் பூடானில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் பூடான் முழுவதிலும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மற்றும் விற்பனை முனையங்களை இந்தியாவில் இருந்து பூடானுக்கு செல்பவர்கள் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தின் இராண்டாம் கட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் பூடானில் இருந்து இந்தியா வருபவர்கள் இங்குள்ள ரூபே மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.