head


ஸ்புட்னிக் வி மருந்து குறைந்த விலை!

|Monday, 23rd November 2020|General| Page Views: 11

கொரோனாவிற்கு எதிரான அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி விலையை விட ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 யின் விலை குறைவு என ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பைசர் தடுப்பு மருந்து ஒரு டோசுக்கு 19.50 டாலர் எனவும், மாடர்னா நிறுவனத்தின் மருந்து டோசுக்கு 25 முதல் 37 டாலர் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒருவருக்கு பைசர் மருந்தின் விலை 39 டாலர், மாடர்னா மருந்து 50 முதல் 74 டாலர் வரை செலவாகும். கொரோனாவை கட்டுப்படுத்த ஒருவருக்கு 2 டோஸ் அளவுக்கு பைசர், ஸ்புட்னிக் வி, மாடர்னா மருந்துகள் தேவைப்படும். அதேநேரத்தில் ஸ்புட்னிக் -வி மருந்தின் விலை, மற்ற இரண்டை விட குறைவாக தான் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.