head


அமெரிக்காவின் சாதனையை முறியடிக்க சீனா திட்டம்!

|Monday, 23rd November 2020|Political| Page Views: 1

பூமியின் மிக ஆழமான கடலடிப் படுகையை ஆராய்ச்சி செய்வதற்கு சீனா நீர்மூழ்கிக் கப்பலொன்றை அனுப்பியுள்ளது. இந்த ஆராய்ச்சி, பசிபிக் பெருங்கடலில், நீரின் மேல்மட்டத்தில் இருந்து பத்தாயிரம் மீற்றர் ஆழங்கொண்ட மரியானா ட்ரெஞ்ச் என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பகுதியில் உயிர்ச் சூழல் பற்றிய மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, பென்டூஸ் எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் சீனா அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள காட்சியைக் கண்டறிய மீயொலித் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த பென்டூஸ் கப்பல் ஏற்கனவே இம்மாதத்தின் தொடக்கத்தில் கடலுக்கு அடியில் சென்று பத்தாயிரத்து 909 மீற்றர் ஆழத்துக்குச் சென்று சாதனை படைத்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.