அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகெய் காலமானார்!
|Tuesday, 24th November 2020||
Page Views: 1
|
|
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகெய்,(வயது84) நேற்று காலமானார்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தருண் கோகெய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு கவுகாத்தியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையின் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவ.,2ம் தேதி அவர் ஜிஎம்சிஎச் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தருண் கோகெயின் உடல்நிலை நேற்று மிக மிக கவலைக்கிடமான இருப்பதாகவும், மருத்துவர்கள் அவர்களால் இயன்றதை முயன்று வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவர், 2001 முதல் 2016 வரையில் அசாம் மாநில முதல்வராக இருந்துள்ளார். காங்., முதல்வர்களில் அதிக காலம் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.
|
|