head


பிள்ளையான் பிணையில் விடுதலை!

|Wednesday, 25th November 2020|Crime| Page Views: 1

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் வழக்குடன் சம்பந்தப்படட ஏனைய ஐவரும் தலா இரு சரீரப்; பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் குறித்த வழக்குதொடர்பான வழக்கு டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.