head


ஹிஸ்புல்லா மில்லியன் கணக்கில் பணத்தை எப்படி பெற்றார்?

|Wednesday, 25th November 2020|Crime| Page Views: 1

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா இரண்டு வங்கி கணக்குகள் மூலமாக மூன்று ஆண்டுகளில் ரூபா 4000 மில்லியனை பெற்றுள்ளதான தகவல் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் விசாரணைக்குழுவில் சாட்சியமளித்த இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் ஐ சி கே கன்னங்கரா மேற்படி விடயத்தை தெரிவித்தார்.

அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில் ஹரா பவுண்டேசன் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி என்ற இரண்டு பெயர்களில் வங்கிக் கணக்குகள் இருந்தன. அவ்வாறு இருந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட நபர்களின் பெயர்களில் ஹிஸ்புல்லாவும் ஒருவர். கடந்த 2016-2017 காலப்பகுதியில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு ஆறுமுறையில் ரூபா 3640 மில்லியன் கிடைத்தது. அதேபோன்று {ஹரா பவுண்டேசனுக்கு ரூபா 313.1 மில்லியன் 15 முறையில் கிடைத்தது.

இந்த பணம் ஐக்கிய அமீரகத்திலிருந்து அமெரிக்க வங்கி மூலமாகவும் மற்றொரு பணம் இங்கிலாந்தில் உள்ள வங்கி ஒன்றின் மூலமாகவும் வைப்புச் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.