200 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்!
|Wednesday, 25th November 2020|General|
Page Views: 1
|
|
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கூறும்போது, கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 2021ஆம் ஆண்டில் சுமார் 200 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு அளிக்கப்படும். மேலும், ஒரு பில்லியன் ஊசிகளும் வழங்கப்படும். இது தொடர்பாக 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
|
|