head


பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

|Wednesday, 25th November 2020|| Page Views: 1

தரையில் உள்ள இலக்கைத் தரையில் இருந்து ஏவி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது அந்த ஏவுகணை இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது.

வழக்கமாக இந்த ஏவுகணை 290 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இலக்கை ஒலியின் வேகத்தைவிட சுமார் மூன்று மடங்கு வேகத்தில் பாய்ந்து அழிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த முறை இலக்கின் தூரம் 400 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. எனினும் அதன் வேகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வானில் இருந்தும், கடலில் இருந்தும் செலுத்தக்கூடிய இந்த ஏவுகணையின் இருவேறு புதிய ரகங்களை இந்திய விமானப் படையும், கடற்படையும் தனித்தனியாக பரிசோதிக்கவுள்ளன. அடுத்த சில தினங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பில் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவுடனான எல்லையையொட்டிய பகுதிகளில் பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கெனவே கணிசமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக கடலில் இருந்து செலுத்தி வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ரக ஏவுகணையை இந்திய கடற்படை கடந்த அக்.18-ஆம் தேதி வெற்றிகரமாக பரிதோதித்து. இந்த சோதனை அரபிக் கடல் பகுதியில் நடத்தப்பட்டது.

வானில் இருந்து செலுத்தி இலக்கைத் தாக்கி அழிக்கும் இந்த ரக ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவி கடந்த அக்.30-ஆம் தேதி விமானப்படை பரிசோதித்தது. இந்த சோதனை வங்கக் கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.