head


மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

|Wednesday, 25th November 2020|Defence| Page Views: 1

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என பொலிஸாரால், 37 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால், 6 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என 37 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று(24) யாழ்ப்பாணம் நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி என். சிறிகாந்தா மற்றும் அன்ரன் புனிதநாயகம் சட்டத்தரணி சுகாஸ். ஆகியோர் முன்னிலையாகினர். இதன் போது, சிரேஸ்ட சட்டத்தரணி மூன்றில் தனது சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இந்த நீதிமன்றிற்கு, விசாரணை செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும் இல்லாவிடில், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தீர்ப்புகளை நீங்கள் செயற்படுத்த முடியும்.

அரச தரப்பிலிருந்து பிரதான சட்டத்தரணிகள் வருகைதர இருந்ததால் காலநிலை காரணமாக அவர்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதனால் வழக்கை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.