head


கடும் மழை காற்றின் தாக்கத்தின்; 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிப்பு!

|Wednesday, 25th November 2020|Natural Disaster| Page Views: 3

கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டப 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்

கடந்த சில தினங்களாக நிலவிவரும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது தற்போது "நிகார் "புயலாக விருத்தியடைந்து காங்கேசன்துறையின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இருந்து 325 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது மேலும் வடமேற்கு திசை ஊடாகதமிழ்நாட்டை நோக்கி அடுத்த 36 மணி நேரத்துக்குள் நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் 80-100 கிலோ மீற்றர் அளவில் காற்றுவீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதனால்

யாழ் மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது எனினும்இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் அத்தோடு 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன நேற்று வடமராட்சி வல்வெட்டித்துறை வடமேற்கு பகுதியை சேர்ந்த ஜே388 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்தார் எனினும் கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்திய கதையினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.