head


உலகை ஆளும் செயற்கைக்கோள்கள்: எதிர்காலத்துக்கு ஆபத்தா நல்லதா? - ஈவா ஒன்டிவெரோஸ்

|Thursday, 24th December 2020|General| Page Views: 63

தொலைதூரத்தில் உள்ள விண்மீன் கூட்டங்கள் மற்றும் புதிய கிரகங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்; நாம் அறிந்த பிரபஞ்சத்தின் எல்லையில் அமர்ந்து கொண்டு, வால் நட்சத்திரங்களை கவனித்துக் கொண்டு தகவல் சேகரிப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்கு பரந்த வெளி கிடைத்திருக்கிறது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த, மிகவும் விலை மதிப்புமிக்க டெலஸ்கோப் உங்களிடம் இருக்கிறது. ஆனால் ஒளிக்கற்றை வீச்சுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறீர்கள்.

மிஷிகன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி இயற்பியல் கற்பிக்கும், விண்வெளி ஆராய்ச்சியாளர் மேகன் டோனாஹுவிற்கு இதுதான் நடந்துள்ளது.

வானில் நகர்ந்து கொண்டிருக்கும் 1,00,000 பிரகாசமான `நட்சத்திரங்கள்' பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகிறார். செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே செயற்கையான நட்சத்திர கூட்டம் போல விண்வெளியில் குவிந்திருக்கும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து செயற்கைக்கோள்களை செலுத்தி வருவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இவர் அமெரிக்க விண்வெளி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். குறிப்பிடத்தக்க இதுபோன்ற இடையூறு காரணமாக சில செயல்பாடுகளை கண்டறியாமலே போய்விடும் என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாம் கவனிக்க முடியாமல் போகும் முக்கிய நிகழ்வுகள் எவை?

நம்மை நோக்கி வரும் சிறுகோள்களை விண்வெளியில் நாங்கள் கவனித்து வருகிறோம். அவை மனிதர்கள் உயிர் வாழ்வதையே கேள்விக்குரியதாக்கிவிடும் என்று அவர் கூறுகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம், செயற்கைக்கோள்களை செலுத்தாத நாளே இல்லை என்ற சூழல் நிலவியது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் (ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமானது) ஏற்கெனவே 650 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. இதுபோன்ற மொத்தம் 12,000 செயற்கைகக்கோள்களை செலுத்த அந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது. ஒன்வெப் என்ற உலக தொலைத்தொடர்பு நிறுவனம் 48,000 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டமிட்டு,இதுவரை 74 செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் தங்களுக்காக 3,236 செயற்கைக்கோளை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் முடியும்போது, ஏற்கெனவே விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுடன் கூடுதலாக 63 ஆயிரம் செயற்கைக்கோள்கள் சேர்ந்து கொள்ளும்.

ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து சில நிறுவனங்கள் தங்களுக்காக விண்ணில் செலுத்தக் கூடிய செயற்கைக்கோள்களை இதில் சேர்க்கவில்லை.

எழுத்தளவில் பார்த்தால் இது நல்லது தான். விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இந்த இயந்திரங்கள் பூமியில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கும்.

ஆனால் செயற்கைக்கோள்களின் கூட்டங்கள் விண்வெளியில் இருப்பதால் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. விண்வெளி விஞ்ஞானிகளின் பார்வையை அது மறைத்து விடும். ஒரு சில நொடிகள் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் மினுமினுப்பு, பல ஆண்டு ஆராய்ச்சியை குப்பையில் போடும் அளவுக்கு மாற்றிவிடும் என்று பேராசிரியை டோனாஹு கூறுகிறார்.

இது பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

ஆமாம். ஏனெனில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி நாம் ஆய்வு செய்வது (எதனால் உருவாகியுள்ளது, அதன் அடர்த்தி என்ன, புவியீர்ப்பு விசை என்ன என்று அறிவது) புதிய தொழில்நுட்பத்துக்கான கதவுகளைத் திறப்பதாக, அனைவருக்கும் இன்னும் சௌகரியமான வாழ்வைத் தருவதாக இருக்கும்.

ஆனால் அதைச் செய்வதற்கு நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் பலவீனமான ஒளிக்கற்றைகளை டோனாஹு கவனிக்க வேண்டும். அதற்கு மிகவும் நவீனமான டெலஸ்கோப்களை அவர் பயன்படுத்துகிறார்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒளி உமிழும் சாதனங்களால் இந்தச் சாதனம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியதாக இருக்கிறது.

பல பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட தொலைவில் உள்ள கிரகங்களின் மிகவும் பலவீனமான ஒளிக்கற்றையை கவனிக்க நான் முற்படும்போது, செயற்கைக்கோள்களின் பிரகாசமான ஒளி இதை அறிய முடியாமல் செய்துவிடுகிறது என்கிறார் பேராசிரியை டோனாஹு.

வேறு மாதிரி சொல்வதாக இருந்தால், அவருடைய நுட்பமான படங்களை செயற்கைக்கோளின் பிரகாசமான ஒளி எரித்துவிடுகிறது.

சில நேரங்களில், பல நிமிட நேரம், பலவீனமான ஒளியைப் பதிவு செய்து கொண்டிருக்கும்போது, செயற்கைக்கோள் ஒளியால் நாசமாகிவிடுகிறது. அதன்பிறகு அதே சாதனத்தைக் கொண்டு மீண்டும் பதிவு செய்வதும் பாதிக்கப் படுகிறது என்கிறார் அவர்.

போட்டோபாம் என்பது `விண்வெளி ஆராய்ச்சிக்குப் பேரழிவானது'

செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆராய்ச்சியின் மீது போட்டோபாம் தாக்குதல் நடத்துகிறது என்று கூறலாமா?

ஆம். பிரச்னையை அப்படியும் பார்க்கலாம் என்று டோனாஹு குறிப்பிடுகிறார். பயங்கரமான வெளிச்ச வேலியை அது உருவாக்குகிறது. அதனால் பிரபஞ்சத்தைப் பற்றிய, கிரகங்கள், விண்கோள்கள், நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணி இதனால் பாதிக்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.

மக்களின் பல ஆயிரம் கோடி டாலர் செலவில் நடைபெறும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை பாதிக்கும் வகையில் வானில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் பணியில் நிறைய நிறுவனங்கள் ஈடுபட வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான வான்பரப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட சிலி நாட்டின் எல்குயி பள்ளத்தாக்கில் அமைக்கப்படும் வெரா ரூபின் விண்வெளி கண்காணிப்பு நிலையம் (வி.ஆர்.ஓ.) இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும். இந்த இடம் தான் முன்னர் எல்.எஸ்.எஸ்.டி. என குறிப்பிடப்பட்டு வந்தது.

அமெரிக்காவுக்கு மிகவும் உயர்வான புதிய டெலஸ்கோப் அமைக்கும் இடமாக உள்ளது. இந்த செயற்கைக்கோள்களால் இது பாதிக்கப்படும் என்பது சோகமான விஷயம் என்றார் டோனாஹு. விண்வெளி ஆராய்ச்சிக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் அவற்றை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகுமா?

ஆனால் அவருடைய பணி பாதிக்கப்படும் என்று கிடையாது.

மனிதர்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும் என்கிறார் டோனாஹு. பூமியை நோக்கி வரும் சிறுகோள்கள், வால் நட்சத்திரங்களை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இவற்றில் ஏதாவது ஒன்று பூமியில் மோதும் வாய்ப்பு இப்போதைக்கு மிகவும் குறைவுதான். ஆனால், அதற்கான மோசமான சாத்தியக்கூறு உள்ளது.

கடந்த செப்டம்பரில், ஈபிள் கோபுரத்தின் அளவில் பாதி அளவு உள்ள இரண்டு வெவ்வேறு விண்கோள்கள், நமது பூமியைக் கடந்து சென்றன. விநாடிக்கு எட்டு மைல்கள் வேகத்தில் அவை நகர்ந்து சென்றன (அதாவது நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 7 நிமிடங்களில் செல்லக் கூடிய வேகம்)

இவற்றை என்.இ.ஓ. என நாசா குறிப்பிடுகிறது. எதிர்காலத்தில் இவற்றின் சுழற்சிப் பாதை பூமிக்கு அருகில் நெருங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால், ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை என்றும் நாசா கூறுகிறது.

அதனால் தான் வேறு பல விண்கோள்கள், நட்சத்திரங்கலை தொடர்ந்து நாசா கண்காணித்து வருகிறது. பூமியின் மீது அவை மோதுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அவற்றை கண்காணிக்கிறது. தேவை ஏற்பட்டால் அவற்றின் மீது மோதி வழி மாற்றம் செய்யவும் நாசா ஆயத்தமாக உள்ளது.

இரவு நேர வானில் மாசுபாடு வான்வெளி யாருக்குச் சொந்தமானது. அங்கே பிரகாசமான வெளிச்சத்தை ஏற்படுத்துவதை யார் கட்டுப்படுத்துவது என்று டோனாஹு கேள்வி எழுப்புகிறார்.

செயற்கைக்கோள்களை விண்வெளியில் குவிக்கும் நிறுவனங்கள் பூமியில் எல்லோருக்கும் சொந்தமான இருளை கெடுக்கிறார்கள் என்கிறார் அவர்.

உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகும் என்பதுடன், எண்ணற்ற ஆர்வத்தை ஏற்படுத்தும், பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் இழந்துவிட நேரிடும் என்று அவர் தெரிவித்தார். மீண்டும் பெற முடியாத வாய்ப்புகளை நிரந்தரமாக இழந்துவிடுவோம் என்கிறார் அவர்.

அதிக பிரச்னை ஏற்படுத்தாத சுற்றுப் பாதைக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப முடியுமா?

பூமியில் இருந்து குறைந்த உயரத்தில் (சுமார் 500 - 600 கி.மீ. உயரத்தில்) செயற்கைக்கோளை செலுத்த எல்லா நிறுவனங்களும் ஒப்புக்கொண்டால், இவை பார்வைக்குத் தெரிவதாக இருக்கும். விண்வெளியில் உள்ள சூரிய வெளிச்சத்தை சூரிய உதயத்துக்கு பல மணி நேரம் முன்பாகவும், சூரியன் மறைந்த பிறகும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பேராசிரியை டோனாஹு கூறுகிறார்.

அதிக உயரமான சுற்றுப் பாதைகளை இந்த நிறுவனங்கள் தேர்வு செய்தால் என்ன ஆகும்?

பிரச்சினை இன்னும் மோசமாகிவிடும். வெரா ரூபின் கோளரங்கம் போன்ற ஆய்வு நிலையங்களுக்கு இரவு நேரத்தில் எடுக்கும் எல்லா படங்களிலும், அதன் தரத்தைக் குறைக்கும் குறுக்கீடுகள் இருக்கும் என்று டோனாஹு தெரிவித்தார்.

அது சிலியில் நடக்கும் பிரச்சினையாக இருக்காது. உண்மையில் சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் கருப்புப் பகுதியின் முதலாவது படம் பற்றி நினைத்துப் பார்க முடியுமா? அவ்வளவு தொலைவில் உள்ள, அவ்வளவு பெரியதான அல்லது இந்த இரு விஷயங்களும் இணைந்த நிலையில் உள்ள விண்கோளை படம் பிடிக்க பூமியில் பெரிய டெலஸ்கோப் கிடையாது.

ஆனால் கறுப்புப் பகுதி திட்டத்துக்குச் செய்ததைப் போல, பூமியில் உள்ள மிகப் பெரிய ஆப்டிகல் டெலஸ்கோப்கள் பலவற்றுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்தினால், மிகப் பெரிய கோளரங்கை உருவாக்கிவிடலாம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கள் ஆய்வுப் பகுதிக்குள் உள்ள தகவல்களை ஒவ்வொரு கோளரங்கமும் பெற்று பதிவு செய்யலாம்.

வி.ஆர்.ஓ. என்பது கோளரங்குகளின் தொடர்பு அமைப்பில் ஒரு பகுதி'' என்று பேராசிரியை டோனாஹு தெரிவித்தார். வி.ஆர்.ஓ.வின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தான் ஈ.எல்.டி. எனப்படும் மிகப் பெரிய டெலஸ்கோப்கள் மற்றும் ராட்சத மெகல்லன் டெலஸ்கோப்கள் தகவல்களை அளிக்கும்.

ஒரு செயல் திட்டம் தோல்வி அடைந்தால், சிலி முதல் இந்தியா வரையில் பல விஷயங்கள் கோளாறாகிவிடும்.

ஒரு இடத்தில் இருக்கக் கூடிய ஒரு கோளரங்கம் என்று கிடையாது என்று டோனாஹு குறிப்பிட்டார். வி.ஆர்.ஓ. மூலம் கிடைக்கும் தகவல் தொகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள யூக்கிளிட் போன்ற புதிய விண்வெளி கோளரங்குகள், சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நான்சி ரோமன் டெலஸ்கோப் மையம் ஆகியவை திட்டமிட்டுள்ளன என்று அவர் விவரித்தார்.

1960-களின் பிற்பகுதியில் அணுசக்திப் போர் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, விண்வெளி பயன்பாடு குறித்து், அணு பேரழிவைத் தடுக்கவும் சில சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல நாடுகள் கையெழத்திட்டன. ரேடியோ அதிர்வலை பயன்பாட்டில் சில சர்வதேச ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால் சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கச் செய்வது தொடர்பாக எந்த ஒழுங்குமுறையும் இல்லை என்று டோனாஹு கூறினார்.

விண்வெளி ஆய்வு மற்றும் பூமியின் எதிர்காலம்

பூமியைச் சுற்றி இவ்வளவு செயற்கைக்கோள்கள் இருந்தால், விண்வெளியில் குப்பையாக இவை மாறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

ஏற்கெனவே சிறிதளவு குப்பைகள் விண்வெளியில் இருக்கின்றன என்கிறார் டோனாஹு.

விண்வெளியில் சிறிய செயற்கைக்கோள்கள் நிறைய இருக்கின்றன. ராக்கெட்களுடன் அவை மோதிவிடாமல் இருப்பதற்காக, அவற்றை நாசா கண்காணித்து வருகிறது என்று அந்த விண்வெளி இயற்பியலாளர் தெரிவித்தார்.

இருந்தாலும் உத்தேதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் என்பது மிகவும் அதிகம், ஏற்கெனவே உள்ளதைவிட அதிக பிரகாசத்தை ஏற்படுத்தக் கூடியவை. மோதும் நிகழ்வுகள் குறித்த கவலை எப்போதும் நீடிப்பதாக ஆகிவிடும் என்று டோனாஹு கூறினார்.

ஆனால் எதிர்காலம் பற்றி பரந்த மனதுடன் இருக்கிறார் டோனாஹு.

அறிவியல்பூர்வமாக, இயற்பியலின் சில மிகப் பெரிய முன்னேற்றங்கள் வான்வெளியை ஆய்வு செய்ததன் மூலம் ஏற்பட்டவை. குறிப்பாக இரவு நேர வான்வெளி ஆய்வில் அதை சாத்தியமாயின என்று அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சத்தின் ஆக்கம், புவியீர்ப்பு, கருப்புப் பகுதி, தொடக்க நேரம், பிரபஞ்சத்தில் நிறை-சக்தியில் 70 சதவீதம் இருப்பதாகக் கருதப்படும் கருப்பு சக்தி உள்ளதா என்ற ஆய்வு, போன்றவை நல்ல புரிதலை ஏற்படுத்தும் என்று டோனாஹு கூறினார். கருப்பு சக்தி என்பது தான் என்ன? பூமியில் உள்ள ஆய்வகங்களுடன் நாம் நின்றுவிட்டால், அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வான்பரப்பு குறித்து நம்மைப் போன்று எதிர்கால சந்ததியினரும் விஷயங்களை அறிந்து கொள்ள வசதியாக, சில ஒழுங்குமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று டோனாஹு தெரிவித்தார்.

இந்த நிறுவனங்களின் பொறியாளர்களும், தலைவர்களும்விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கோளரங்க பொறியாளர்களின் கருத்துகளுக்கு மாறுபட்ட எண்ணம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நாம் விண்வெளியை நேசிப்பதால், நம்மில் பலர் விண்வெளி ஆராய்ச்சியில் இருக்கிறோம் என்று டோனாஹு கூறினார்.

முதலில் இந்த சிக்கலை உருவாக்கியவர்களிடம் இருந்து தான் இதற்கான தீர்வுக்கு முன்முயற்சி தொடங்க வேண்டும். விண்ஓடங்கள் மற்றும் கோளரங்குகள் உருவாக்கும் நபர்கள் தான், நேரம், செலவு, விண்வெளி வரம்புகள் குறித்த சவால்களுக்கு புதிய சிந்தனையுடன் தீர்வுகளைக் காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிபிசி



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.